தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அம்பேத்கர் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 அம்பேத்கர் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 அம்பேத்கர் யாத்திரைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜன 13, 2026 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அம்பேத்கர் யாத்திரையில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் நலத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு;

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ள 'அம்பேத்கர் யாத்திரை' திட்டத்தின் கீழ், இந்தியாவில் அவரது நினைவுகளை பறைசாற்றும் முக்கிய இடங்களுக்கு 8 நாட்கள் முற்றிலும் இலவசமாக பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த யாத்திரையில், அம் பேத்கர் பிறந்த இடமான மகோ (மத்திய பிரதேசம்), தீட்சை பெற்ற இடமான நாக்பூர், உயிர்நீத்த இடமான டில்லி, தகனம் செய்யப்பட்ட இடமான மும்பை ஆகிய முக்கிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ள ன. இந்த யாத்திரை வரும் பிப்ரவரி 25ம் தேதி துவங்க தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது .

யாத்திரையில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் துறையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us