sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கார்பென்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

 கார்பென்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

 கார்பென்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : பிப் 10, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 04:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாரில் ஏற்பட்ட தகராறில் கார்பென்டரை அடித்து கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த இடையஞ்சாவடியை சேர்ந்தவர் உலகநாதன் மகன் வினோத் (எ) வினோத் குமார் 38; கார்பென்டர். இவர் கடந்த 3ம் தேதி ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, சிலருடன் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

அதில், ஆத்திரமடைந்த எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் வினோத்தை சரமாரியாக தாக்கியத்தில், படுகாயமடைந்த வினோத் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், தன்வந்தரி நகர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து வினோத்தை அடித்து கொலை செய்த துருவை (ஓட்டம்பாளையம்) சேர்ந்த பரசுராம் மகன் கார்த்திகேயன், 35; எட்டியன் மகன் சஞ்சய், 24; ஜானகிராமன், 36; ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய ஹரியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பூத்துறை பகுதியில் பதுங்கி இருந்த ஹரியை 33; போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us