/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் விமான சேவை இந்த மாதத்துடன் நிறுத்தம்
/
புதுச்சேரியில் விமான சேவை இந்த மாதத்துடன் நிறுத்தம்
புதுச்சேரியில் விமான சேவை இந்த மாதத்துடன் நிறுத்தம்
புதுச்சேரியில் விமான சேவை இந்த மாதத்துடன் நிறுத்தம்
ADDED : மார் 09, 2024 02:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் விமான சேவையை வரும் மார்ச் 31ல் நிறுத்துவதாக தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனமும் புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவையை துவங்கின. போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில் மத்திய அரசு புதிய விமான கெள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என, அறிவிப்பு வெளியிட்டது. அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் துவங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்துக்கு விமான சேவையை துவங்கியது.
இதற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூவுக்கு விமான சேவையை விரிவுப்படுத்தியது.
இதனிடையே புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை மார்ச் 31 முதல் நிறுத்த விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்காக நிர்வாக ரீதியாக விமான நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு விமான நிலையத்துக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.

