தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி திட்ட இயக்குனருக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆதரவு

 புதுச்சேரி திட்ட இயக்குனருக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆதரவு

 புதுச்சேரி திட்ட இயக்குனருக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆதரவு


ADDED : மார் 02, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்வாக சீர்திருத்தங்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சங்க பொதுச்செயலாளர் ரகுராமன் அறிக்கை;

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் 75க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக எய்ட்ஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் சில அதிகாரிகளின் அரசியல் தலையீடுகளால் நிர்வாக சிக்கல்கள், பணி நியமன முறைகேடுகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பு குறைபாடுகள் நிலவின.​

இந்நிலையில், 2025ல் புதிய திட்ட இயக்குனர் பொறுப்பேற்ற பின், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்பட்டது. முறைகேடுகள் களையப்பட்டு, அலுவலகத்தில் ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட் டுள்ளது.​

அலுவலகம் மற்றும் களப்பணியாளர்கள் மத்தியில் பாதுகாப்பான பணிச்சூழல் உருவாக்கப்பட்டது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் வழிகாட்டுதலுக்கு புறம்பாக பணியில் சேர்ந்த சில அதிகாரிகள், திட்ட இயக்குனரின் சீர்திருத்த நடவடிக்கைகளை பொறுக்க முடியாமல் அவர் மீது தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.

நேர்மையாக செயல்படும் திட்ட இயக்குனர் மீது அவதுாறு பரப்பும் நபர்கள் மீது அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us