sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேளாண் பயிற்சி முகாம்: செயல்விளக்க கண்காட்சி

 வேளாண் பயிற்சி முகாம்: செயல்விளக்க கண்காட்சி

 வேளாண் பயிற்சி முகாம்: செயல்விளக்க கண்காட்சி


ADDED : ஏப் 19, 2026 06:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:28 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், ஊரக வேளாண் பயிற்சி முகாம் செயல்விளக்கக் கண்காட்சி செட்டிப்பட்டில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர் மற்றும் திட்ட பொறுப்பாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்த கண்காட்சியில், மாணவிகள் தேவதர்ஷினி, தனஸ்ரீ, தரணிஸ்ரீ, ஏ.தர்ஷினி, ஜி. தர்ஷினி, பி. தர்ஷினி, இலக்கியா, காளி எரோனிகா சாந்தி, எஸ்.ஹரினி, வி. ஹரினி, ஹேமலதா ஆகியோர் பல்வேறு வேளாண்மை தொடர்பான தலைப்புகளில் தங்கள் அறிவையும் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, உயிர் உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், கால்நடை பராமரிப்பு, பயிர் நோய் & பூச்சி மேலாண்மை, கிராம வரைபடம், மண் வகைகள், வேளாண் கருவிகள், பாரம்பரிய நெல் வகைகள், மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தேனீ வளர்ப்பு கிட் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு, செயல் விளக்கம் அளிக்கப்பட்டன.

மேலும், நவீன வேளாண்மை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. ஆகியோர் கலந்து கொண்டு செயல்விளக்கம் அளித்தனர். கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வீட்டு தோட்டம் அமைப்பதற்காக விதைகள் மற்றும் நாற்றுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us