sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புத்தகப் பையில் பாம்பு

புத்தகப் பையில் பாம்பு

புத்தகப் பையில் பாம்பு


ADDED : மார் 12, 2024 05:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 05:10 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பள்ளி மாணவரின் புத்தகப்பையில் பதுங்கிய பாம்பினை வனத் துறை ஊழியர்கள் பிடித்தனர்.

புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் தனது புத்தகப்பையை எடுக்க முயன்றபோது,அதில் பாம்பு நெளிவதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார்.அதை தொடர்ந்து, மாணவர்களும்,ஆசிரியர்களும் வகுப்பறையில் சிதறி ஓடினர்.தகவல் அறிந்து வந்த வனத் துறை ஊழியர்கள் கண்ணதாசன்,வேலாயுதம் ஆகியோர் மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை பிடித்தனர்.

வனத்துறை ஊழியர்கள் கூறும்போது,பிடிப்பட்ட விஷம் இல்லாத சாரை பாம்பு.வளர்ந்த பெரிய சாரைப்பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் நச்சுத்தன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும்போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us