sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மீனவர் கொலை வழக்கு 7 வாலிபர்கள் கைது

/

 மீனவர் கொலை வழக்கு 7 வாலிபர்கள் கைது

 மீனவர் கொலை வழக்கு 7 வாலிபர்கள் கைது

 மீனவர் கொலை வழக்கு 7 வாலிபர்கள் கைது


ADDED : ஜன 04, 2026 06:51 AM

Google News

ADDED : ஜன 04, 2026 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மீனவரை கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி, வைத்திகுப்பத்தை சேர்ந்தவர் செந்தில், 38; மீனவர். இவர், கடந்த 31ம் தேதி இரவு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நள்ளிரவு 1:00 மணிக்கு வீட்டிற்கு சென்றார்.

அப்போது, அதேப் பகுதியை சேர்ந்த 20 வயதிற்குட்பட்ட 7 வாலிபர்கள் புதுச்சேரி கடற்கரையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டனர். மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த அவர்கள், பைக்கை அதிவேகமாக ஓட்டியபடி, கூச்சலிட்டு சென்றனர்.

அதனை வீட்டின் முன் நின்றிருந்த செந்தில் கண்டித்தார். இதனால் செந்திலுக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. செந்திலை, அவர்கள் 7 பேரும் கற்கலால் தாக்கி கொலை செய்தனர்.

இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து, ஆரோவில் பகுதியில் பதுங்கியிருந்த 7 வாலிபர்ளையும் போலீசார் பிடிக்க சென்றனர்.

போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், முத்தியால்பேட்டையை சேர்ந்த பவிலன், 24; திலீப், 23; ஆகாஷ், 24; அரவிந்த், 23; தமிழ்மணி, 24; சதீஷ் குமார், 24; மற்றும் கருவடிக்குப்பம் திவாகர், 23; என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில் 7 பேரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் தப்பிக்க முயன்றதில், தடுக்கி விழுந்து பவிலன், திலீப் ஆகியோருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் அரசு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.

இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us