/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
5.50 டன் பூமாலைகள், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு சேகரிப்பு புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பில் புதுமை
/
5.50 டன் பூமாலைகள், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு சேகரிப்பு புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பில் புதுமை
5.50 டன் பூமாலைகள், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு சேகரிப்பு புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பில் புதுமை
5.50 டன் பூமாலைகள், பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு சேகரிப்பு புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பில் புதுமை
ADDED : ஆக 31, 2025 11:54 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சிலை கரைப்பில் பெறப்பட்ட 5.50 டன் பூமாலைகள், குடைகள், ஆடைகள் அனைத்தும் உரம், பிளாஸ்டிக் தயாரிப்பு, ஆலைகளுக்கு மறுசூழற்சிக்காக அனுப்பப்பட்டன.
புதுச்சேரியில் நேற்று விநாயகர் சிலைகள் விஜர்சனம் நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1000 விநாயகர் சிலைகள் பழைய துறைமுக வளாகத்தில் கரைக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. விநாயகர் கரைப்பு ஊர்வலத்தின்போது கொண்டு வரப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்ய புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் இந்தாண்டு புதுமுயற்சியை செய்திருந்தது. இதற்காக பழைய துறைமுக வளாகத்தில் தனி அரங்கினை ஏற்படுத்தி இருந்தது.
சிலைகளுடன் வந்த பூமாலைகள், உதிரி பூக்கள் தனியாக சேகரிக்கப்பட்டன. அடுத்து, ஆடைகள் தனியாகவும், கற்பூரம், ஊதுவத்தி, பிளாஸ்டிக் பைகளும் தனித்தனியே சேகரிக்கப்பட்டன. இந்து முன்னணியினர், விழா ஏற்பாட்டாளர்கள் அரசின் மறுசுழற்சி முறைக்கு முழு ஒத்துழைப்பு தந்து, இப்பொருட்களை கொடுத்தனர்.
மொத்தம் 1000 விநாயகர் சிலைகளில் இருந்து 5.50 டன் அளவிற்கு பூமாலைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ஆடைகள் பெறப்பட்டன. பின் இவைகள் மறுசுழற்சிக்காக வாகனங்களில் அனுப்பப்பட்டன.
இப்பணியை ஆய்வு செய்த புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் கூறும்போது , 'பசுமை விநாயகர் சதுர்த்தி திட்டம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிக்கரமாக செயல்படுத்தப்பட்டது. விநாயகர் சிலை கரைப்பின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்க, புதுச்சேரி அரசு முதல் முறையாக இந்தாண்டு எடுத்த மறுசுழற்சிக்கு முயற்சிக்கு கைமேல் ப லன் கிடைத்துள்ளது.
இந்தாண்டு 4 டன் பூமாலைகள், உதிரி பூக்கள் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 1 டன் அளவிற்கு ஆடைகள், தெர்மாகோல் குடைகள் விநாயகர் சிலை கரைப்பின்போது மறுசூழற்சிக்காக சேகரிக்கப்பட்டன.
பூமாலைகளில் நார்கள் அகற்றி 15 நாட்கள் மண்ணில் மட்க செய்து உரம் தயா ரிக்கவும், ஆடைகள் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருட்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல் கற்பூரம், ஊதுவத்தி, பிளாஸ்டிக் பைகள் மூலப்பொருளாக மாற்றப்பட்டு பிளாஸ்டிக் பக்கெட், குவளை உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்கப்பட உள்ளது. மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் முயற்சியால், கடலை மாசுப்படுத்தும் எந்த பொருட்களும் கரைக்கப்படவில்லை.
சுற்றுச்சூழலை காக்கும் சிறப்பான பணியில் மாசு கட்டுப்பாட்டு குழுமத்தினருடன், எவர்கீரின் மன்ற தன்னார்வலர்களும் பங்கேற்றனர்' என்றார்.