sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதலியார்பேட்டையில் 52 பன்றிகள் பிடிப்பு

 முதலியார்பேட்டையில் 52 பன்றிகள் பிடிப்பு

 முதலியார்பேட்டையில் 52 பன்றிகள் பிடிப்பு


ADDED : ஜன 10, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதலியார்பேட்டை பகுதியில், சுற்றித்திரிந்த 52 பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

புதுச்சேரி நகர பகுதிகளில் சாலை மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பன்றிகள் சுற்றித்திரிவதாக பொதுமக்களிடம் இருந்து, நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதையடுத்து, பன்றிகளால் நோய்கள் பரவுவதை தடுக்க, பன்றிகளை, ஏழு தினங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என, பன்றிகள் வளர்பவர்களுக்கு, கடந்த 27ம் தேதி, அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கால்நடை மருத்துவர் ஆர்த்தி தலைமையில், நகராட்சி சுகாதார ஊழியர்கள் நேற்று, முதலியார்பேட்டை, வேல்ராம்பட்டு, முருங்கப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 52 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us