/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
/
ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
ADDED : டிச 20, 2025 06:21 AM
பாகூர் டிச. 20-: பாகூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் காயமடைந்தனர்.
கடலுாரில் இருந்து கடந்த 17ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில், ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி சென்றது. கடலுார் கல்யாணசுந்தரம் ஆட்டோவை ஒட்டினார். கன்னியக்கோவிலில் தனியார் மதுக்கடை அருகே சென்ற போது, திடீரென இரண்டு நாய்கள், சாலையின் குறுக்காக ஓடி இரண்டு நாய்களும், ஆட்டோவின் கீழ் பகுதியில் சிக்கி கொண்டது. இதில், ஆட்டோ நிலை தடுமாறி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த கடலுார், சர்க்கரைகுளம் ஜெயந்தி, 42; சுப்ரமணியபுரம் ராஜேஷ்வரி, 35; ராஜலட்சுமி 39; மணக்குப்பம் கல்யாணசுந்தரம், 54; ஆட்டோ டிரைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

