/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற 3 பேர் கைது: 1 கிலோ பறிமுதல்
/
கஞ்சா விற்ற 3 பேர் கைது: 1 கிலோ பறிமுதல்
ADDED : டிச 21, 2025 06:09 AM

புதுச்சேரி: கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து, 60 ஆயிரம் மதிப்புள்ள, ஒரு கிலோ கஞ்சவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
முத்திரையர்பாளைம், காந்தி திருநல்லுாரை சேர்ந்த கார்த்திக்ராஜா, 29; தர்மாபுரி சதீஷ், 20; விழுப்புரம் ஆயந்துார் அமோஸ் பெர்னாண்டஸ், 27; என்பதும், அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.150 கிராம் கஞ்சா மற்றும் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர்களை, நேற்று கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

