sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 29வது தேசிய புத்தக கண்காட்சி

 29வது தேசிய புத்தக கண்காட்சி

 29வது தேசிய புத்தக கண்காட்சி


ADDED : டிச 19, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:22 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில், 29வது தேசிய புத்தக கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.

புத்தக கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைக்கிறார். சபாநாயகர் செல்வம், ஜான்குமார் எம்.எல்.ஏ., எழுத்தாளர் புத்தக சங்க தலைவர் முத்து ஆகியோர் பங்கேற்கின்றனர்.

துவக்க விழாவில் 30 நுால்கள் வெளியிடப்பட உள்ளன. வரும் 28ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளன. புதுச்சேரி எழுத்தாளர்களின் நுால்களுக்கு, தனி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுால்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிற து. காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. புத்தகம் வாங்கும் வாசகர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, தினசரி ரூ.1,000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசா க வழங்கப்படும்.

பல ஆண்டுகளாக பங்கேற்கும் புத்தக நிறுவனங்களுக்கு புத்தக சேவா விருதுகள், கண்காட்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைத்தவர்களுக்கு புத்தக சேவா ரத்னா விருதுகள் வழங்கப்படவுள்ளன. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1000 புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழ்களும் ஆயிரத்தின் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ரூ.10,000 அதிகமாக புத்தகம் வாங்குபவர்களுக்கு புத்தகச் சிறந்த நட்சத்திரம் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சியையொட்டி, தினமும் பேச்சு, கவிதைப் போட்டிகள் மாலை நடக்க உள்ளது.

புத்தக கண்காட்சியில் இன்று புத்தக கண்காட்சி துவக்க விழாவை தொடர்ந்து இன்று (19ம் தேதி) மாலை 6:00 மணிக்கு கற்றலும் கற்பித்தலும் என்ற தலைப்பில் சிறப்பு அரங்கம் நடக்கிறது. தொடர்ந்து பேராசிரியர் பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு விழா, துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் நடக்கிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us