/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது
ADDED : டிச 23, 2024 06:14 AM
புதுச்சேரி: கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் ரோந்து சென்றனர்.
நோதாஜி நகர், அசோக் நகர் சந்திப்பில் இரு வாலிபர்கள் கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை மிரட்டிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்த 2 வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை, செயின்பால்பேட் மாரியம்மன் கோவில் தெரு மதன் (எ) காக்காமுட்டை, 19; கிருபா (எ) கிருபானந்தம், 18, என்பதும் தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

