ADDED : அக் 28, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்:  அக். 29-:  பொதுமக்களுக்கு இடையூறு செய்த  2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சொரப்பூரைச் சேர்ந்த சுபாஷ், 27;  என்பவர் மது போதையில், கல்மண்டபம்-நெட்டப்பாக்கம் சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இவரை, போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று, சேதராப்பட்டு பிப்டிக் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த பரங்கணி பகுதியைச் சேர்ந்த கவுதம், 24; என்பவரை சேதாரப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

