/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வந்தே பாரதம் பாடலின் 150வது ஆண்டு விழா
/
வந்தே பாரதம் பாடலின் 150வது ஆண்டு விழா
ADDED : நவ 10, 2025 03:26 AM

திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசுக் கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவு மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில் வந்தே பாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர் மொஹந்தி உத்தரவின் பேரில், நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார்.
என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட் கதிர்வேல் முன்னிலை வைத்தார். கணிதத் துறை பேராசிரியை உதயகீதா வரவேற்றார்.
கலிதீர்த்தாள்குப்பத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட மொழிப்போர் தியாகி சாரங்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, புதுச்சேரி சுதந்திரப் போராட்ட அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, மாணவ மாணவிகளின் வந்தே மாரதம் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் தேசிய கொடியுடன், வந்தே மாதரம் பாடலை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். வணிகவியல் துறை தலைவர் செந்தமிழர்ராஜா நன்றி கூறினார்.

