/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாடகை வாகன கடைகளில் 15 பைக்குகள் பறிமுதல்
/
வாடகை வாகன கடைகளில் 15 பைக்குகள் பறிமுதல்
ADDED : நவ 23, 2024 05:27 AM
புதுச்சேர : மிஷன் வீதியில் உரிமம் இன்றி இயங்கிய வாடகை வாகன கடைகளில் இருந்த 15 பைக்குளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புகள் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினமும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து நகரத்தின் முக்கிய சாலைகளின் ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன.
கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் நேற்று மாலை மிஷன் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வாடகை வாகன கடைகளில் திடீர் ஆய்வு செய்து, ஆவணங்களை சோதனை செய்தனர்.
பல்வேறு வாடகை வாகன கடைகள், உரிமம் இன்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து, உரிமம் இன்றி இயங்கிய வாடகை வாகன கடைகளில் இருந்த 15 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் மற்றும் விளம்பர பலகைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

