sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொதுப்பணித்துறை பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொதுப்பணித்துறை பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பொதுப்பணித்துறை பணியிடங்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 07, 2024 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2024 05:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 99 இளநிலை பொறியாளர் (சிவில்) மற்றும் 69 மேற்பார்வையாளர்கள் (குரூப் 'பி') பணியிடங்களுக்கு இன்று (7 ம் தேதி) காலை 10:00 மணி முதல் ஆன்லைன் மூலம் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் வகுப்பு வாரியாகவும் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினீயரிங் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்லுா ரிகளில் படித்து முடித்திருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வுகள் (முதல் தாள், 2ம் தாள்) ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும்.

முதல் தாளில் ஆங்கிலம், பொதுஅறிவு, பொது அறிவியல் ஆகிய பிரிவுகளில் 80 மதிப்பெண்களுக்கும், கம்ப்யூட்டர் 20 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் கேட்கப்படும். 2ம் தாளில் சிவில் படிப்புகள் தொடர்பாக கேள்விகள் இடம்பெறும். தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us