ஓட்டும் எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி
ஓட்டும் எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி
ADDED : ஏப் 29, 2026 08:22 PM

புதுச்சேரி: ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் தாகூர் அரசு கலைக்கல்லுாரி ஆகிய மூன்று மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இம்மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து, கலெக்டர் குலோத்துங்கள் நேற்று ஆய்வு நடத்தினார். இந்நிலையில், ஓட்டு எண்ணும் தேதியில் கட்சியினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பிற்காக ஓட்டு எண்ணும் மைய வளாகம் மற்றும் சாலையோரத்தில் தேர்தல்துறை சார்பில், மரக்கழிகள் கொண்டு தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
