/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப் போட்ட அதிகாரிகள் மரக்கன்றுகள் நட்டனர்
/
ஓட்டுப் போட்ட அதிகாரிகள் மரக்கன்றுகள் நட்டனர்
ADDED : ஏப் 20, 2024 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : இந்திராநகர் தொகுதி ஓட்டுச்சாவடி மையத்தில், தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஓட்டளித்த பின்னர், மரக் கன்றுகளை நட்டனர்.
புதுச்சேரி, லோக்சபா தேர்தலில், இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட, அன்னை தெரசா சுகாதார அறிவியல் மற்றும் பட்ட மேற்படிப்பு நிலையத்தில் ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு நேற்று காலை தலைமை செயலர் சரத் சவுகான், தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், அரசு செயலர்கள் ஜெயந்த குமார் ரே மற்றும் கேசவன் ஆகியோர், ஓட்டுப் போட்டனர்.
இதையடுத்து பசுமைத் தேர்தலின் ஒரு பகுதியாக அந்த மையத்தில், அதிகாரிகள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டனர்.

