நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அருகே எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தவளக்குப்பம் அடுத்து இடையார்பாளையம் பகுதியில் எல்லைம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டார். அம்மனுக்கு, சிறப்பு பூஜைகளும், இரவு சாமி வீதியுலா நடந்தது.

