/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல் அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவு
/
செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல் அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவு
செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல் அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவு
செந்நிறமாக மாறிய புதுச்சேரி கடல் அறிக்கை தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : மார் 28, 2024 01:55 AM
சென்னை:புதுச்சேரி கடல் செந்நிறமாக மாறியது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கூட்டுக்குழுவுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 17ம் தேதி புதுச்சேரி பகுதியில் கடல் நீர் செந்நிறமாக மாறியது. லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் விமான நிலையத்தின் பின் பகுதியில் உருவாகும் ஓடை, கழிவுநீர் வாய்க்காலாக மாறி, நகரப் பகுதி வழியாக கடந்து வைத்திக்குப்பம் கடலில் கலக்கிறது.
இந்த வாய்க்கால் கலக்கும் பகுதியில் இருந்து, சுமார் 2 கி.மீ., துாரத்திற்கு கடல்நீர் திடீரென செந்நிறமாக காணப்பட்டது. இதனால் மீன்களும் இறந்து கிடக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட நிபுணர் குழுவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆனால், கடலில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுப்பதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கிறதா என்பது குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடற்கரை அருகில் உள்ள கைகளால் செய்யப்படும் காகித ஆலை தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலக்காமல் தடுக்கப்பட வேண்டும்.
வழக்கின்அடுத்த விசாரணை வரும் மே 17ம் தேதி நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

