/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அழகர் சித்தர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
அழகர் சித்தர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஏப் 15, 2024 03:45 AM
புதுச்சேரி : தென்னம்பாக்கம் அழகர் சித்தர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்திப்பெற்ற பூரணி பொற்கலை உடனுறை அழகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி காலை 7.00 மணிக்கு ஆற்றிலிருந்து கரகங்கள் புறப்பாடும், 10.00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது.
நாளை 15ம் தேதி காலை 9.00 மணிக்கு அழகர் சித்தர் பீடத்தில் விசேஷ ஆராதனை, 11.00 மணிக்கு தென்னம்பாக்கம் ஆற்றில் இருந்து அழகர் திருமணத்திற்க புறப்படுதல், மாலை 5.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

