ADDED : ஆக 29, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கல்லுாரியில் பைப், இரும்பு திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பத்துக்கண்ணு-தொண்டமநாத்தம் சாலையில் தனியார் பொறியியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில் கடந்த ஒரு மாதமாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தேவையாண பிளாஸ்டிக் பைப், இரும்பு ஆகியவைகள் வாங்கப்பட்டு பணி நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான 15 பிளாஸ்டிக் பைப்கள், இரும்பு ஆகியவற்றை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

