/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு
/
சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு
ADDED : ஏப் 15, 2024 05:17 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே பனையபுரம் கோவிலில், கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், பழமை வாய்ந்த சத்தியாம்பிகை உடனுறை பனங்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு, சித்திரை மாதம் முதல் ஏழு நாட்களுக்கு, சிவலிங்கம் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது.
நேற்று குரோதி வருட சித்திரை மாதம் முதல் நாள் என்பதால் சூரிய பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகர், ஆறுமுகனார், 63 நாயன்மார்கள், சூரியனார், சத்தியாம்பிகை, பனங்காட்டீஸ்வரர் ஆகிய சாமி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, காலை 6:15 மணிக்கு சூரிய ஒளியானது கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் மீது படும் நிகழ்வு நடந்து.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

