/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தரையர் மேல்நிலைப் பள்ளி சாதனை
/
முத்தரையர் மேல்நிலைப் பள்ளி சாதனை
ADDED : மே 14, 2024 05:12 AM

புதுச்சேரி: முத்தரையர்பாளையம், முத்தரையர் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் 102 மாணவர்கள் தேர்வு எழுதி 102 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளியளவில் மாணவி ரித்திகா 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி கவிதா 490 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி தர்ஷினி 488 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
450 மதிப்பெண்களுக்கு மேல் 44 பேரும், 400 மதிப்பெண்களுக்கு 57 பேர் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளி முதல்வர் முத்துராமன் கூறுகையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்கள் பயிலும் எங்கள் பள்ளியில் ஒவ்வொறு மாணவர் மீதும் தனி கவனம் செலுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பிளஸ் வகுப்பில் சேர்த்து, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வைக்கிறோம். 450 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் கட்டண சலுகை வழங்கப்படும் என்றார்.
முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

