/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
/
காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
ADDED : மார் 24, 2024 04:24 AM

புதுச்சேரி: சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம், இந்திராகாந்தி மருத்துவ கல்லுாரி பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், மதர் தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, துணை இயக்குனர்கள் முரளி, ராஜாம்பாள் துவக்கி வைத்தனர். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் சித்ரா, மருத்துவ அதிகாரி விவேகானந்தா, காச நோய் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், காச நோய் மருத்துவ அதிகாரி சந்திரசேகரன், தகவல் தொடர்பு அதிகாரி மணிமாறன் உட்பட மருத்துவ அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காச நோயினால் ஏற்படும் பாதிப்புகள், அதற்கான மருத்துவ தீர்வுகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மருத்துவ கல்லுாரி மாணவர்கள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி, கம்பன் கலையரங்கில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

