/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டலில் திடீர் தீ விபத்து ரூ. 10 ஆயிரம் சேதம்
/
ஓட்டலில் திடீர் தீ விபத்து ரூ. 10 ஆயிரம் சேதம்
ADDED : ஏப் 06, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி திருவள்ளுவர் நகர், பாரதி வீதியில் ஆனந்த இன் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உள்ள கேன்டின் பகுதியில் நேற்று இரவு 11:15 மணிக்கு மின் கசிவு காரணமாக திடீரெனதீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

