ADDED : ஏப் 30, 2024 05:23 AM
டிரைவருக்கு வலை
புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி பெண்ணை மானபங்கம் செய்த டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயது மாற்றுத்திறனாளி பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், சின்ன முதலியார்சாவடியில் உள்ள தனியார் தொண்டு நிறுவன பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி வாகனத்தில் தனது தாயுடன் பள்ளிக்கு செல்வது வழக்கம்.
கடந்த 4 மாதத்திற்கு முன்பு இளம்பெண்ணுடன் படிக்கும் சக மாணவரின் தாய் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பள்ளி வேனில் பயணம் செய்த அனைவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவரின் தாயை பார்க்க சென்றனர். பள்ளி வேனில் மாற்றுத்திறனாளி மாணவி மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது, சோலை நகர், பாப்பாம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த சேர்ந்த டிரைவர் கணேசன், சிறுமி மானபங்கம் செய்துவிட்டு, இதை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் நடந்த சம்பவத்தை தனது குடும்பத்திடம் தெரிவித்ததுடன்,முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் டிரைவர் கணேசன் மீது வழக்கு பதிந்து அவரை தேடிவருகின்றனர்.

