/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
/
வில்லியனுார் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 22, 2024 05:16 AM

வில்லியனுார்: வில்லியனுார் பகுதி சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வில்லியனுார் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4:30 மணியளவில் நந்திகேஸ்வரர் திருமாலுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிேஷம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்புறப்பாடு நடந்தது.
திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் தலைமை அர்ச்சகர் சரவணன் தலைமையில் மூலவருக்கும், நந்திக்கும் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம், தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சுவாமி உள்புறப்பாடு நடந்தது.
வி.மணவெளி திரிவேணி நகரில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திவேணிஸ்வரர் கோவிலில், ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோவில், வில்லியனுார் மெயின்ரோடு அனந்தம்மாள் சத்திரம் ஏகாம்பரநாத மகேஸ்சுவரர் கோவில், ஒதியம்பட்டு வண்ணார பரதேசி சுவாமிகள் சித்தர் பீடம் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

