/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தண்டவாளத்தை சீரமைக்க ரயில்வே கேட் மூடல்
/
தண்டவாளத்தை சீரமைக்க ரயில்வே கேட் மூடல்
ADDED : ஏப் 02, 2024 03:59 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தண்டவாளம் மாற்றும் பணிக்காக நேற்று ரயில்வே கேட் மூடப்பட்டது.
விழுப்புரம் -திருக்கோவிலுார் மார்க்க சாலையில் மாம்பழப்பட்டு கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டில் உள்ள இருபுற தண்டவாளங்களும் துருபிடித்திருந்தது. இதனை மாற்ற ரயில்வே அதிகாரிகள், தெற்கு ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று ரயில் அந்த மார்க்கத்தில் இல்லாத நேரத்தில் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவை பெற்றனர்.
அதன் பேரில், நேற்றிரவு 9:00 மணிக்கு மாம்பழப்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டது. இன்று 2ம் தேதி காலை 6:00 மணிக்குள் தண்டவாளத்தை மாற்றும் பணிகளை முடிப்பதோடு, ரயில்வே கேட்டை வாகனங்கள் கடந்து செல்லும் வழியில் ரப்பர் பேட்கள் வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடக்கிறது.
இரவு 9:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இந்த மார்க்கத்தில் ரயில்கள் இல்லாததால் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளையொட்டி, அவ்வழியே செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலை வழியாக சுற்றிச் செல்லும் வகையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, போக்குவரத்திற்கான மாற்று சாலை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

