ADDED : மார் 26, 2024 10:39 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் நான்கு நாட்கள் நடக்கும்,பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று துவங்குகிறது.
புதுச்சேரிபி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் விடுத்த செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல் நான்கு நாள் சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் அலுவலகம் அருகில், திருக்கனுார், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி அருகில், வில்லியனுார் மற்றும் ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகத்தில் நடக்கிறது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
அதற்கான மோடம் முற்றிலும் இலவசம்.புதிய எப்.டி.டி.எச் இணைப்பு, ரூ.329, முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு ரூ.999,க்கும் கிடைக்கும்.
ரூ.269, மதிப்புள்ள, சிம் கார்டு ரூ.50,க்கு வழங்கப்படுகின்றது.
இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு, 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
