sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 

மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 

மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 


ADDED : செப் 02, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 01:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கம் சார்பில், விடுதலை நாள் விழாவை முன்னிட்டு தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

சங்க வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைவர் கலைமாமணி முத்து தலைமை தாங்கினார். செயலாளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். துணைத் தலைவர்கள் தமிழ்மாமணி ஆதிகாசவன், திருநாவுகரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலாளர் தினகரன் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் சங்கீதா கண்ணன், அம்பேத்கர் இலக்கிய பேரவை தலைவர் அன்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

இதில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ் பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆட்சிக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார். தமிழ்மாமணி உசேன், சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us