/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் கம்பெனி நிர்வாகி தற்கொலை
/
தனியார் கம்பெனி நிர்வாகி தற்கொலை
ADDED : மார் 30, 2024 06:48 AM
புதுச்சேரி : கடன் தொல்லையால் தனியார் கம்பெனி நிர்வாகி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி சண்முகாபுரம் நேருவீதியைச் சேர்ந்தவர் தனிகைவேல் 41, பிளாஸ்டிக் மூடி தாயரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதற்கிடையில் கம்பெனி நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கி இருந்தார்.
மேலும் கடன வாங்கி தர கூறி மனைவி சந்திராவிடம் கேட்டார். ஆனால் சந்திரா கடன் வாங்கி தர மறுத்ததால் கோவித்துக் கொண்டு கோணேரிக்குப்பத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில் அவரது அண்ணன் வீட்டில் உள்ள மின்விசிறியில் நைலான் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

