தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரிக்கெட் சங்க விழாவில் வீரர்கள் கவுரவிப்பு

கிரிக்கெட் சங்க விழாவில் வீரர்கள் கவுரவிப்பு

கிரிக்கெட் சங்க விழாவில் வீரர்கள் கவுரவிப்பு


ADDED : மார் 26, 2024 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி 21 வது ஆண்டு விழாவையொட்டி, துத்திப்பட்டில் நடந்த நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

புதுச்சேரி அடுத்த துத்திப்பட்டில் கேப் -சீகெம் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி தலைவர் தாமோதரன், சீகெம் நிறுவனத்தின் நிறுவனர் பத்மா முன்னிலை வகித்தனர்.

அசோசியேஷன் கவுரவ செயலாளர் ராமதாஸ், முன்னாள் செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கிரிக்கெட் வீரர்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிரிக்கெட் அஸோசியேஷன் தலைவர் தாமோதரன் ஆண்டு அறிக்கை வெளியிட்டு பேசுகையில், 'புதுச்சேரி கிரிக்கெட் வளர்ச்சிக்கான சிறப்பான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது' என்றார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய நடுவர்கள், ஸ்கோரர், வீடியோ அனலிஸ்ட், டிரைனர், அணி மேலாளர்கள் மற்றும் சிறந்த பணியாளர்களுக்கும் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

துணைத் தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us