/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய டெங்கு தினம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : மே 16, 2024 10:54 PM

புதுச்சேரி: தேசிய டெங்கு தினத்தையொட்டி நகர பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேசிய டெங்கு தினத்தையொட்டி, மலேரியா திட்ட உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பழைய சட்டக்கல்லுாரி அருகே துவங்கிய ஊர்வலத்தை மலேரியா திட்ட உதவி இயக்குனர் வசந்தகுமாரி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஊர்வலம் செஞ்சி சாலை, லால் பகதுார் சாலை, கம்பன் கலையரங்கம் வரை நடந்தது. ஊர்வலத்தில் சமுதாயத்தோடு இணைந்து டெங்கு கட்டுப்பாடு என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆட்டோ பிரசாரம் மூலமும் நகர பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார உதவியாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பூச்சியியல் உதவியாளர்கள், மலேரியா களப்பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

