sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதலியார், கருணிகர் சமூகத்தை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க கோரிக்கை

முதலியார், கருணிகர் சமூகத்தை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க கோரிக்கை

முதலியார், கருணிகர் சமூகத்தை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க கோரிக்கை


ADDED : ஜூலை 26, 2024 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2024 04:21 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: புதுச்சேரியில் முதலியார், கருணிகர் (பிள்ளை) சமூகத்தை ஓ.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என அங்காளன் எம்.எம்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர், டில்லியில் தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத் தலைவர் கன்ஸ்ராஜ் கங்கராம் அகிரை சந்தித்துகோரிக்கை மனு வழங்கினார்.

அதில், புதுச்சேரியில்முதலியார் , கருணிகர் (பிள்ளை) போன்ற சமுதாயத்தினர் பொது பட்டியல்களில் இருந்து வருகின்றனர்.

மத்திய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதுச்சேரியில் வசித்து வரும் முதலியார், கருணிகர் (பிள்ளை) போன்ற சமுதாயத்தினரை சேர்க்க வில்லை.

அவர்களுக்கு மத்திய அரசு பணி மற்றும் உயர் கல்வியில் சேர்வது சிக்கலாக உள்ளது.

புதுச்சேரி மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் பூர்வீக முதலியார், கருணிகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆனால் தமிழ்நாடு அரசு இவை இரண்டு சமுதாயத்தையும் மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்துள்ளது.

எனவே மத்திய, மாநில அரசுகள் முதலியார், கருணிகர் சமுதாயத்தைச் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us