/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாதிரி வாக்குச்சாவடி மையம் ; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
மாதிரி வாக்குச்சாவடி மையம் ; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
மாதிரி வாக்குச்சாவடி மையம் ; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
மாதிரி வாக்குச்சாவடி மையம் ; அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : மார் 28, 2024 04:25 AM

புதுச்சேரி : இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மாதிரி வாக்குச்சாவடி மையங்களை அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்து அசத்தியுள்ளனர்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சவுமியா, கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜெகதீஷ் ஆகியோர், தேர்தல் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இயற்கை பொருளால் ஓட்டுச்சாவடி உள்ளே உள்ள அதிகாரிகள், யார் யாருக்கு என்ன வேலைகள், பொதுமக்கள் எந்த அளவுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி செய்துள்ளனர்.இதன் நோக்கம் நுாறு சதவீதம் வாக்கு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் மையக்கருத்தினை உருவாக்கி இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த படைப்புகள் மூலம் பொதுமக்களுக்கு கல்லுாரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.