தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருடிய நபர் கைது 

பைக் திருடிய நபர் கைது 

பைக் திருடிய நபர் கைது 


ADDED : செப் 01, 2024 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 04:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி, அரியூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அமிர்தீன், 55; பேக் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 21ம் தேதி வந்த நபர், தனக்கு 15 ஸ்கூல் பேக் வேண்டும் என கூறியுள்ளார்.

பின், கையில் பணம் இல்லை, ஏ.டி.எம்., மையம் சென்று பணம் எடுத்து வர அமிர்தீன் பைக்கை கேட்டு வாங்கி சென்றார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை.

அமிர்தீன் அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் பைக்கை திருடி சென்ற சின்னசேலம் பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ், 45; என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us