/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பராமரிப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'
/
பராமரிப்பு பணி 2 நாள் குடிநீர் 'கட்'
ADDED : மே 19, 2024 03:43 AM
புதுச்சேரி : முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவில் அருகே கீழ்நிலை, மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பராமரிப்பு பணி காரணமாக 21ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை, அங்காளம்மன் நகர், ரங்கசாமி நகர், பள்ளத்தெரு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்படுகிறது.
22ம் தேதி, முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டி, முருங்கப்பாக்கம் பேட் பகுதி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி காரணமாக மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை, சேத்திலால் நகர், கணபதி நகர், முருங்கப்பாக்கம் பேட், அன்னை தெரெசா நகர், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இத்தகவலை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

