sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண்ணாடிப்பட்டுக்கு இடைத் தேர்தல் அவசியமா?

மண்ணாடிப்பட்டுக்கு இடைத் தேர்தல் அவசியமா?

மண்ணாடிப்பட்டுக்கு இடைத் தேர்தல் அவசியமா?


ADDED : ஏப் 09, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 05:05 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொகுதி மக்களிடம் அன்பழகன் கேள்வி

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அக்கட்சியின் செயலாளர் அன்பழகன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

தேர்தலில் நமச்சிவாயம் விருப்பம் இன்றி போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில்நமச்சிவாயம்வெற்றிக்காக பாடுபட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அவரை சந்தித்து வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், நமச்சிவாயம் டில்லி சென்று விடுவார்.

கடந்த தேர்தலில் அவருக்காக உழைத்தவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். இதை உணர்ந்து நமச்சிவாயத்திற்கு வாக்களித்து, உங்களை நீங்களே அழித்து கொள்ளாதீர்கள்.

நமச்சிவாயத்திற்கு ஓட்டு போட்டால் தொகுதி மக்கள் கஷ்டப்படுவீர்கள். ஏனென்றால், இடைத் தேர்தல் வருவதற்கு ஓராண்டாகி விடும். எம்.எல்.ஏ., இல்லாமல் இந்த தொகுதி மக்கள் கஷ்டப்படும் சூழல் ஏற்படும். எனவே, இந்த தொகுதியில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல் அவசியமா என யோசித்து அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டு அளியுங்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அரசு கொண்ட வரவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படாமல் உள்ளது.

கஞ்சா கடத்தும் மாநிலமாக புதுச்சேரி மாறி வருகிறது. சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை. பா.ஜ., வெற்றி பெற்றால் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஆட்சி மாற்றத்தை பா.ஜ., கொண்டு வரும்.ஐந்து வருடம் எம்.பி.,யாக இருந்த வைத்திலிங்கம், தனது நிதியை முழுமையாக செலவிடாமல் 25 சதவீதம் நிதியை திருப்பி ஒப்படைத்தவர். வரும் 2026 தேர்தலில் இத்தொகுதியில் மகாதேவி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us