/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை திறந்து வெள்ளை அரிசி வழங்கப்படும்
/
காங்., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை திறந்து வெள்ளை அரிசி வழங்கப்படும்
காங்., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை திறந்து வெள்ளை அரிசி வழங்கப்படும்
காங்., ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடை திறந்து வெள்ளை அரிசி வழங்கப்படும்
ADDED : ஏப் 11, 2024 04:05 AM

காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் உறுதி
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி தனது சொந்த தொகுதியான தட்டாஞ்சாவடி மக்களையே ஏமாற்றி உள்ளார் என காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதியில் இண்டியா கூட்டணியில், காங்., சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூ., கட்சி மாநில துணை செயலாளர் சேதுசெல்வம்உள்ளிட்டோருடன் தட்டாஞ்சாவடியில் நேற்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது, வைத்திலிங்கம் பேசியதாவது:
புதுச்சேரி முழுதும் மக்கள் ரேஷன் கடை திறந்து அரிசி வழங்க வேண்டும் என கேட்கின்றனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி அரிசிக்கு பதில் பணம் கொடுக்கிறேன். அதில் வாங்கி கொள்ளுங்கள் என்கிறார்.
ஒரு கிலோ அரிசி ரூ. 60க்கு விற்கின்றனர். ரேஷன் கார்டுக்கு ரூ. 300 கொடுத்து அரிசி வாங்கச்சொன்னால், 5 கிலோ தான் வாங்க முடிகிறது.
எனவே, பிரசாரத்திற்கு வரும் முதல்வரிடம் அரிசி தான் வேண்டும் என கேளுங்கள்.
மகளிருக்கு மாதந்தோறும் வழங்கும் ரூ. 1000 கூட முதல்வர் தொகுதியில் பலருக்கும் கிடைக்கவில்லை.முதல்வர் ரங்கசாமி தனது சொந்த தொகுதி மக்களையே ஏமாற்றுகிறார். காங்., வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்து,ராகுல் பிரதமரானால் முதல் வேலையாக புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறந்து சூப்பரான வெள்ளை அரிசி வழங்கப்படும்.
வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் பெண்களை வேலையில்லாதவர்கள் என கூறுகின்றனர். அந்த மகளிருக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ராகுல் பிரதமரானால், ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் வழங்குவோம் என அறிவித்துள்ளார்.
ராகுல் சொன்னால் செய்ய கூடியவர் என்பதால், கை சின்னத்திற்கு ஓட்டு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை, இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

