/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் கெடுபிடி ரயிலில் வந்த கொடிகள்
/
தமிழகத்தில் கெடுபிடி ரயிலில் வந்த கொடிகள்
ADDED : ஏப் 11, 2024 03:56 AM

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தமிழகத்தில் போட்டியிடும் சில கட்சிகள் தங்களின் எதிரணியில் உள்ள கட்சிகளுக்கு கொண்டு வரப்படும் பிரசார பொருட்கள் குறித்து தேர்தல் துறையினருக்கு தகவல் தெரிவித்து சிக்கலை ஏற்படுத்துகின்றனர்.
சமீபத்தில் தமிழக பா.ஜ.,விற்கு வாகனத்தில் வந்த கட்சி கொடி, சால்வை உள்ளிட்ட பொருட்கள் இப்படி தேர்தல் துறையிடம் சிக்கியது. சரியான ஆவணங்களை காட்டியும் இழுபறிக்கு பின்பே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பின்னணியில் தி.மு.க., உள்ளதாக, தமிழக பா.ஜ.,வினர்டில்லி தலைமையிடம்புகார் தெரிவித்து இருந்தனர்.
இதை தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான கட்சிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களை வாகனம் மூலம் அனுப்பாமல், ரயிலில் பார்சல் மூலம் டில்லியில் இருந்து அனுப்பப்படுகிறது.
இதுபோல அனுப்பப்பட்ட பார்சல்கள் நேற்று முன்தினம் டில்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுச்சேரிக்கு வந்தது. பார்சலில் கட்சி கொடிகள், சிறிய ரக துண்டுகள், தொப்பிகள், கையில் அணியும் பேண்டுகள் உள்ளிட்டவை இருந்தது.
இவற்றை டாடா ஏஸ் வாகனத்தில் பா.ஜ.,வினர் எடுத்து சென்றனர்.

