/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேட்டுப்பாளைத்தில் குடிநீர் 'கட்'
/
மேட்டுப்பாளைத்தில் குடிநீர் 'கட்'
ADDED : மே 25, 2024 03:58 AM
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வரும் 27 மற்றும் 28ம் ஆகிய தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மேட்டுப்பாளையம் நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
வரும் 27ம் மற்றும் 28ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, மேட்டுப்பாளையம், சண்முகாபுரம், மாணிக்க செட்டியார் நகர், சோனியாகாந்தி நகர், வடக்கு பாரதிபுரம், மீனாட்சிபேட்டை, வி.பி.சிங்., நகர், மக்கலட்சுமி நகர், ராம் நகர், கதிர்காமம், நெசவாளர் குடியிருப்பு அதனை சார்ந்த பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

