/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு அரிய வாய்ப்பினை 'மிஸ்' பண்ணிடாதீங்க....
/
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு அரிய வாய்ப்பினை 'மிஸ்' பண்ணிடாதீங்க....
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு அரிய வாய்ப்பினை 'மிஸ்' பண்ணிடாதீங்க....
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு அரிய வாய்ப்பினை 'மிஸ்' பண்ணிடாதீங்க....
ADDED : மார் 31, 2024 04:38 AM

புதுச்சேரி, : 'தினமலர்' மெகா கல்வி திருவிழாவான வழிகாட்டி நிகழ்ச்சி இரண்டாம் நாளாக நேற்றும் களை கட்டியது. பிரபல கல்வி நிறுவன அரங்குகளை பார்வையிட்ட மாணவர்கள், பல்வேறு உயர் படிப்புகள் குறித்து, விரிவாக கேட்டு தெரிந்து கொண்டனர்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் வழிகாட்டி நிகழ்ச்சி, புதுச்சேரி சித்தன்குடியில் பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது.
முதல் நாளில் சி.ஏ., சி.எம்.ஏ., எதிர்கால பொறியியல் படிப்புகள், விண்வெளி தொழில்நுட்பம், கேட்டரிங், ஐ.ஐ.டி.,மெட்ராசில் பி.எஸ்., சயின்ஸ் படிப்புகள் குறித்து கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர். கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய மாணவர்கள் எதிர்காலம் தொடர்பான அனைத்து சந்தேங்களையும் எழுப்பி தெளிவு பெற்றனர்.
இரண்டாம் நாளான நேற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி களை கட்டியது. பெற்றோருடன் மாணவர்கள் காலை 9:00 மணி முதலே குவியத் துவங்கினர். வழிகாட்டி நிகழ்ச்சி வளாகத்தில், ஏராளமான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் சார்பில், உயர் கல்வி ஆலோசனைக்கான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகளை ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவர்களும், பெற்றோரும் எந்தெந்த கல்வி நிறுவனங்களில், என்ன வகை பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன.
அவற்றுக்கான மாணவர் சேர்க்கை, கட்டண விகிதம், குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் சம்பள விபரம் போன்றவற்றை, கல்வி நிறுவன அரங்குகளில் மாணவர்களும், பெற்றோரும் தெரிந்து கொண்டனர்.
கருத்தரங்கம்
இரண்டாம் நாள் வழிகாட்டி நிகழ்ச்சியில் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் கல்வி ஆலோசனை கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. காலை சிறப்பு அமர்வில், ஆர்ட்டிபிஷியல் இன்டிஜென்ஸ் குறித்து அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் வெங்கட்டசுப்ரமணியன், சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அழகுமூர்த்தி, துணை மருத்துவப் படிப்புகள் குறித்து புதுச்சேரி மதர் தெரசா இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் பேராசிரியர் ஸ்ரீதேவி விளக்கம் அளித்தனர்.
மாலையில் நடந்த அமர்வில் கலை அறிவியல் படிப்புகள் குறித்து கல்வியாளர் திருமகன், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் வழிமுறைகள் குறித்து கல்வியாளர் உஷா ஈஸ்வரன் விளக்கம் அளித்தனர்.
பொது அறிவு போட்டி
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், பொது அறிவு போட்டி நடத்தி, சரியான விடை எழுதியவர்களுக்கு, லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக 24 மாணவர்கள் இப்பரிசுகளை வென்றுள்ளனர். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும், பொது அறிவு போட்டியில் கலந்து கொண்டதால், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்றுடன் நிறைவு
மூன்றாம் நாளான இன்று 31ம் தேதியுடன் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. இன்றைய நிகழ்விலும் கல்வியாளர்கள், வல்லுனர்கள் உயர் கல்விக்கான ஆலோசனை வழங்க உள்ளனர். கைநிறைய சம்பளம் தரும் வேலைவாய்ப்புக்கான படிப்புகள் எவை; எதிர்கால வாழ்வை பிரகாசமாக்கும் பாட பிரிவுகள் என்ன; உயர்கல்வி படிக்கும்போதே, வளர்க்க வேண்டிய திறன்கள்; கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை குறித்து, நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தின் முன்னணி கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி ஆலோசனை நிறுவனங்களின், 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஒவ்வொரு கல்லுாரிக்கும் நேரில் சென்று பெற வேண்டிய தகவல்களை, ஒரே வளாகத்தில் அமைந்துள்ள அரங்குகளில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்.
நுழைவு தேர்வு:
'நீட்' மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்து அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம்.
இணைந்து வழங்குவோர்
இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பவர்டு பையாக கரம் கோர்த்து வழங்குகின்றன. கோ-பான்சர் - ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி களம் இறங்கியுள்ளது. மேலும் வழிகாட்டி நிகழ்ச்சியை ருசி பால் நிறுவனம், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியோ, அக்குவாகிரீன் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியவை இணைந்து வழங்குகின்றன. வருங்கால வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வழிகாட்டும் நிகழ்ச்சியை, மாணவ மாணவியர் மட்டுமல்ல, பெற்றோரும் மிஸ் பண்ணிடாதீங்க....

