sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள்  ஆலோசனை

தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள்  ஆலோசனை

தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள்  ஆலோசனை


ADDED : ஆக 24, 2024 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 05:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., இளைஞர் அணி சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டை முன்னிட்டு, பேச்சுப் போட்டி நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், லப்போர்த் வீதியில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பேச்சுப் போட்டியை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

புதுச்சேரி மாநிலத்தில் வரும், 26ம் தேதி புஸ்சி வீதி, ரோஸ்மா திருமண நிலையத்தில் போட்டியை நடத்துவது என்றும், இதில், 300 கல்லுாரி மாணவ - மாணவியரை பங்கேற்க வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இப்போட்டியில் கட்சி தலைமையால் நியமிக்கப்படும் நிர்வாகிகள், நடுவர்களாக இருந்து, சிறப்பாக பேசும் மாணவர்களை தேர்வு செய்வர். அவர்கள், தமிழக அளவில் நடக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ், முகிலன், ரெமி எட்வின், உத்தமன், தாமரைக்கண்ணன், கிருபாசங்கர், அகிலன், தமிழ்பிரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us