/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தண்டனை கைதி மீது வழக்குப் பதிவு
/
சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தண்டனை கைதி மீது வழக்குப் பதிவு
சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தண்டனை கைதி மீது வழக்குப் பதிவு
சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல்: தண்டனை கைதி மீது வழக்குப் பதிவு
ADDED : மே 02, 2024 12:28 AM
காரைக்கால், : காரைக்கால் சிறைத்துறை உதவி அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் மதகடி பகுதியில் பிரஞ்சு காலத்தில் கட்டப்பட்ட தனிக்கிளை சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்ட தண்டனை கைதி, விசாரணை கைதிகள் என, 40க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு கொலை வழக்கு தண்டனை கைதி புதுச்சேரி, முதலியார்பேட்டையை சேர்ந்த அமலன், 48, என்பவர், அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், சில நாட்களுக்கு முன், சிறையில் தனக்கு உதவியாக பணிகளை செய்ய கைதியை ஒருவர் உடன் இருக்க வேண்டும் என, சிறை அதிகாரியிடம் தெரிவித்தார். இதை மறுத்த சிறை அதிகாரியை அமலன் ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
பின், கழிவறைக்கு பயன்படுத்தும் பினாயிலை எடுத்து குடித்த அமலன், அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து சிறை உதவி அதிகாரி யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், அமலன் மீது நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

