ADDED : மே 14, 2026 04:22 PM
குடிநீர் விரயம்
கதிர்காமம் வழுதாவூர் சாலை சொக்கநாதன்பேட்டையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி விரயமாகிறது.
அன்பழகன், கதிர்காமம்.
தெரு விளக்கு எரியுமா?
கோரிமேடு, இந்திரா நகர் அன்னை தெரேசா வீதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ஸ்ரீதர், தட்டாஞ்சாவடி.
தெரு நாய்கள் தொல்லை
கோரிமேடு பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
பாஸ்கர், கோரிமேடு.
காமராஜ் நகர் தொகுதி, சங்கரதாஸ் சுவாமிகள் நகர், 5வது தெருவில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
சிவமூர்த்தி, புதுச்சேரி.
சாலையில் கழிவுநீர்
சாரம், வெங்கடேஸ்வரா மேற்கு பகுதி சேரன் வீதியில் கழிவுநீர் சாலையில் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
காந்தி, புதுச்சேரி.
கல்லுாரி வளாகம்
சுத்தம் செய்யப்படுமா?
சின்னக்காலாப்பட்டு சட்டக் கல்லுாரி வளாக பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுத்தம் செய்ய வேண்டும்.
பூர்ணிமா, புதுச்சேரி.
