நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிநீர் வீணாகும் அவலம்
கோரிமேடு, காவல் குடியிருப்பு பகுதியில்குடிநீர் சாலையில் வீனாக செல்கிறது.
ராஜேந்திரன், ரெட்டியார்பாளையம்.
சாலையில் ஓடும் கழிவு நீர்
கதிர்காமம் ராகவேந்திரா நகரில், கழிவுநீர் சாலையில் செல்வதால் துர்நாற்றம்வீசி வருகிறது.
சண்முகம், கதிர்காமம்.
சாலை சேதம்
நெல்லித்தோப்பு அண்ணா நகரில், சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சசிக்குமார், நெல்லித்தோப்பு.
போக்குவரத்திற்கு இடையூறு
மதகடிப்பட்டு, மெயின் ரோட்டில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டி மூடாமல் இருப்பதால், போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.
ராணி, மதகடிப்பட்டு.

