/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்ஜெட்டை கண்டித்து கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்
/
பட்ஜெட்டை கண்டித்து கம்யூ., கட்சிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 13, 2024 05:17 AM

புதுச்சேரி: இடதுசாரி கூட்டணி சார்பில் பட்ஜெட்டை கண்டித்து பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட கட்சி சார்பில், புதுச்சேரி பட்ஜெட்டை கண்டித்து நேற்று பேரணியாக சென்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரணி, ராஜா தியேட்டரில் இருந்து புறப்பட்டு நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்று, சட்டசபை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி.பி.ஐ., மாநில செயலாளர் சலீம், மூத்த தலைவர் விஸ்வநாதன் முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், சி.பி.எம்., மாநில செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள் உட்பட இடதுசாரியின் முக்கிய நிர்வாகிகள், வி,சி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில், புதுச்சேரி வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் பென்ஷன் கடன், மின்சாரம் உள்ளிட்டவை வாங்குவது போக மீது 8 சதவீத நிதியில், எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. பி.ஜே.பி.,யுடன் கூட்டணி வைத்தால், மத்திய அரசு மூலம் மாநில அரசுக்கு கூடுதல் நிதி கிடைக்கும் என முதல்வர் கூறியது பொய்யாகியது என பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

