/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூடப்பட்ட தாவரவியல் பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
மூடப்பட்ட தாவரவியல் பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மூடப்பட்ட தாவரவியல் பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மூடப்பட்ட தாவரவியல் பூங்கா: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 22, 2024 05:32 AM

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி பணி காரணமாக தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள தாவரவியல் பூங்கா 1826ல் அமைக்கப்பட்டது. இது இந்தியாவில் தலை சிறந்த பூங்காக்களில் ஒன்று. குழந்தைகளுக்கு இயற்கையை புரிய வைக்க சிறந்த இடம் இந்த தாவரவியல் பூங்கா.
இதேபோல் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் 90 சதவீத பேர் இந்த தாவரவியல் பூங்காவிற்கு வந்து செல்லுகின்றனர். ஆனால், கடந்த பிப்வரி மாதம் முதல் தாவரவியல் பூங்கா திறக்கப்படாமல் பூட்டி கிடப்பதால் கோடை காலத்தில் குழந்தைகளுடன் வரும் பெற்றோர், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து செல்லுகின்றனர்.
இது குறித்து தாவரவியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'தாவரவியல் பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் துவங்கி நடந்து வருகின்றது. இதற்காக 9.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிறுவனமான என்.பி.சி.சி., இந்தியா லிட்., நிறுவனத்திற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்காவின் நுழைவு வளைவை புதுப்பித்தல், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் கழிவறைகளை புனரமைத்தல், வெளிப்புற ஜாகிங் டிராக், கண்ணாடி மாளிகை, புதிர் தோட்டம், ஆம்பிதியேட்டர் புதுப்பித்தல், செல்பி பாயின்ட், வரைபடத்துடன் கூடிய சைகை பலகைகள் ஆகியவை அடங்கும்.
தாவரவியல் பூங்கா பணிகள் விரைவில் முடிந்து, ஜூன் மாதம் தாவரவியல் புதுபொலிவுடன் தயாராகி விடும். அதுவரை பாதுகாப்பு கருதி தாவரவியல் பூங்காக திறக்கப்படாது' என்றனர்.

